காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்!

0
55

காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்!

கொரோனா தொற்று முடிவடைந்துவிட்டது என்று எண்ணி மக்கள் நிம்மதி கொள்வதற்குள் அதன் உருமாற்றம் ஒமைக்ரான் வந்துவிட்டது. இது தென்னாப்பிரிக்காவில் உருமாறி அதிக பாதிப்பை அளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. மக்களின் உயிரை காப்பாற்ற அனைத்து நாட்டு அரசும் விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றனர். நமது இந்தியாவில் மத்திய அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநிலங்கள் தங்களின் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி உத்தரவிட்டது.

அதற்கு ஏற்ப மாநில அரசுகள் தங்களின் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது தமிழக அரசு முன்தினம் ஊரடங்கு அமல் படுத்தி உத்தரவிட்டது. அதில் வரும் 20ம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறியது. அதேபோல வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வருகின்றனர். அதைப்போல மருத்துவக்கல்லூரி தவிர மற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் விடுப்பு அளித்துள்ளனர்.

அதனால் விடுதியில் தங்கி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். அதனால் பேருந்து நிலையங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.. அதுமட்டுமின்றி ஐடி துறையில் வேலை செய்பவர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அக் காரணத்தினாலும் சில ஐடி துறைகளில், ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கூறியுள்ளனர். அந்த ஊழியர்களும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் கூடுகின்றனர். இச்சமயத்தில் அரசு விரைவு போக்குவரத்து வரும் 16ஆம் தேதி காண முன்பதிவு இன்றும் தொடங்கவில்லை.

அதனாலும் வரும் பண்டிகை காலங்களில் ஊருக்கு செல்ல முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி பலர் தற்போது சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். அதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. 50 சதவீதம் மட்டுமே இருக்கைகள் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற அரசின் விதிமுறைகள் அனைத்தும் தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டது. இது மட்டுமின்றி மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட கூடாது என்ற கட்டுப்பாட்டை மக்கள் சிறிதும் பின்பற்றவில்லை.

நேற்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது.அப்பொழுதும் மக்கள் அரசாங்கம் கோரிய விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் வெளியே நடமாடியதால் ,சென்னை மாநகரத்தில் மட்டும்  547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருக்குமாயின் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க கூடும்.