அரசு ஊழியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

0
64

நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் அதனை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நோய் தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் முன் களப்பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல காவலர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் மக்கள் தொகை செவிலியர்களுக்கு இருபதாயிரம் ஊக்கத்தொகை என்று அறிவித்து இருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று நிவாரண தொகையை எந்த விதமான தாமதமும் இல்லாமல் அந்தந்த துறை சார்ந்த தலைவர்கள் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முன்கள பணியாளர்களுக்கான அரசின் நிவாரண உதவியை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.