தமிழக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த பாஜகவின் எல்.முருகன்!

0
64

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து இரண்டாவது முறையாக பதவியேற்ற இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் சேவை தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த விதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் சென்னை அமைந்தகரையில் நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறார்.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய முருகன் சென்னையில் தற்சமயம் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் இந்த நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஒரே நாளில் எல்லா கடைகளும் திறந்து மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கி சென்னையில் பரவியிருந்த நோய் தொற்று நோய் மற்ற மாவட்டங்களிலும் பரவ வழி செய்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறார் முருகன்.

சுமார் நான்காயிரம் பேருந்துகளை ஒரே நாளில் இயக்கச் செய்து 6 லட்சம் பேர் வெளி ஊர்களுக்கு சென்று இருக்கிறார்கள். இதன் காரணமாக, நோய்த் தொற்று பரவல் சென்னையை அடுத்து மற்ற மாவட்டங்களிலும் பரவ திமுக காரணமாகி விட்டது என்று தெரிவித்திருக்கிறார் பாஜகவின் மாநில தலைவர் முருகன்.

மத்திய அரசு தமிழக அரசுக்குக் கொடுத்த தடுப்பூசிகளை மாநில அரசு சரிவர பயன்படுத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் மத்திய அரசு மாநில அரசுக்கு தடுப்பு ஊசிகளை கொடுத்து தான் வருகிறது. நோய்க்கு தடுப்பூசி இந்தியாவில் கொண்டுவரப்படும் சமயத்தில் அதனை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் இன்று தடுப்பூசி பற்றாக்குறை என்று விமர்சனம் செய்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் எல். முருகன்

சென்னை பிஎஸ்பிபி பண்ணி விவகாரத்தில் தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் பள்ளி நிர்வாகத்தை சார்ந்தவர்கள் மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது. அரசுப்பள்ளிகளில் குற்றங்கள் நடைபெற்றால் அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா என்று முருகன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.