முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! இவங்களுக்கெல்லாம் செம குஷி!

0
45

தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.

கொரோனா பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் சென்ற மார்ச் மாதம் 24ம் தேதி முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், மூடப்பட்டன இதனை தொடர்ந்து அக்டோபர் மாத கடைசியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், செயல்படும் என்று அறிவித்தது அரசு.

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்கு அனேக பெற்றோர்கள் ஆட்சேபனை தெரிவித்து இருக்கிறார்கள்.

அதோடு 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பள்ளிகளை திறக்கவே வேண்டாம் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இதற்கிடையே இந்த கருத்து கேட்பு கூட்டத்தின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கின்றார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் பதினாறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொற்று காரணமாக மாணவர்களுடைய நலனை கருத்தில்கொண்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது ,சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.