அரசு வேலை ரத்து! பெற்ற  குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி! 

0
80

அரசு வேலை ரத்து! பெற்ற  குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி! 

மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு அரசு வேலை போய்விடும் என்ற கருதிய தம்பதி ஐந்து மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அரசு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த அந்த நபர் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்த பின் வேலை போய்விடும் என்ற அச்சத்தில் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசி உள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாகாணத்தில் உள்ள பிகானேர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜவர்லால் மேக்வால் வயது 36, இவர் அங்குள்ள ஓர் அரசு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகின்றார். திருமணம் ஆகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஜவர்லாலின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமுற்றார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு ஊழியர்கள் கட்டாய ஓய்வு என்ற பாலிசி நடைமுறையில் உள்ளது. மாநில அரசின் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற வேண்டும் என்ற திட்டத்தால்  அவரின் வேலை நிரந்தரம் குறித்து அவருக்கு அச்சம் ஏற்பட்டது.

இதனால் அவருக்கு மூன்றாவது குழந்தையால் அரசு வேலைக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று எண்ணிய அந்த தம்பதியினர் மூன்றாவதாக பிறந்த  5 மாத பெண் குழந்தையை ஞாயிற்றுக்கிழமை பிகானேர் மாவட்டத்தில் சத்தர்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கால்வாயில் வீசி உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி பிகானேர் காவல் நிலைய கண்காணிப்பாளர் யோகேஷ் யாதவ் கூறுகையில் அரசு வேலையை தக்க வைத்துக் கொள்ள குழந்தையை கொன்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிரந்தர அரசு பணியை பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்று கூறினார்.

அரசு வேலைக்காக பெற்ற குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.