மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

0
152
#image_title

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர், எம். ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டனர்.

இதில் புதிய உழவர் சந்தை, வாரச்சந்தை அமைத்தல், பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள், புதிய குடிநீர் திட்ட பணிகள்,பேவர்பிளாக் சாலை அமைத்தல், இரண்டு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கம்,பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட 10-கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

சிப்காட் தொழிற்பூங்காவிற்கான பணிகள் துவங்கபட்டு நடந்து வருகிறது, இதே போல ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிக்காக மறு மதிப்பீடு செய்யப்பட்டு 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், ஓகேனக்கல் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், காட்டு யானைகள் உயரிழப்பதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக அரசு எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.