அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மத்திய அரசு!

0
63

தொழிலாளர்களின் எதிர்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.1% ஆக மத்திய அரசு குறைத்திருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்திருப்பதாவது, கடந்த 2021- 22 உள்ளிட்ட நிதி ஆண்டுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியிருக்கிறது என தெரிவித்துள்ளது.

சென்ற 2020-21 நிதி ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட சூழ்நிலையில், தற்போது அது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது என பி.எஃப்.ஓ தெரிவித்திருக்கிறது. 5 கோடி தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்த அமைப்பில் கடந்த 1977-78 நிதியாண்டில் எதிர்கால வைப்புநிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 40 வருடத்துக்கு பிறகு குறைந்த அளவாக 2021-22 நிதி ஆண்டுக்கு 8.1% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2017- 18 நிதியாண்டில் 8.55 சதவீதமாக இருந்தது. அதேபோல 2016-18ல் 8.65 சதவீதமாகவும், 2018-19 ல் 8.65 சதவீதமாகவும், 2019 -20ல் 8.5% ஆகவும், நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், தற்போது அந்த வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட்டிருக்கிறது என்பது தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.