தமிழக அரசின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய திட்டம்!

0
66

தமிழக அரசின் BELL 412EP ரக ஹெலிகாப்டரை பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது இந்த ஹெலிகாப்டர் 2019 முதல் பயன்படாமல் இருந்த சூழ்நிலையில், ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசிடம் 2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ரக ஹெலிகாப்டர் ஒன்று இருக்கிறது சென்னை மீனம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த ஹெலிகாப்டர் 2009ஆம் வருடம் நவம்பர் முதல் இயக்கப்படாமல் இருக்கிறது. அரசுமுறை பயணங்களுக்காக முதலமைச்சரால் பயன்படுத்தப்படும் இந்த ஹெலிகாப்டர் இதுவரையில் 2449 மணி நேரம் பறந்து இருக்கிறது. 14 பேர் பயணம் செய்யக்கூடிய வசதி இருக்கின்ற இந்த ஹெலிகாப்டர் பேரிடர் காலங்கள், அவசரப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் வகையில் தயார் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டரை ஆம்புலன்ஸாக மாற்றி மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் நடவடிக்கை குறித்து சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் முடிவில் இதுகுறித்து அமைக்கப்பட்ட அரசு அதிகாரிகள் கொண்ட குழு இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்துவது குறித்து திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், முதல் கட்டமாக தமிழக அரசின் இந்த ஹெலிகாப்டரை பராமரிக்க தமிழக அரசு டெண்டர் தெரிவித்திருக்கிறது.. இதன் அடிப்படையில் தொடர்ந்து காற்று தகுதி மேலாண்மை அமைப்பு அனுமதியுடன் அனுபவம் வாய்ந்த ஹெலிகாப்டர் பராமரிப்பு நிறுவனங்களிடமிருந்து சீல் செய்யப்பட்ட டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு இந்த டெண்டர் சமர்ப்பிக்க படுவதற்கான கடைசி நாள் அடுத்த வருடம் ஜூன் மாதம் 1ம் தேதி மாலை 3 மணி வரை உடன் இதன் கால அவகாசம் முடிவடைய இருப்பதாகவும், டெண்டர் அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்கள் www.tenders.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனை சார்பாக கடந்த 2010ஆம் வருடம் ஹெலிகாப்டர் அவசர உதவி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அரசின் சார்பாக இந்த திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும், ஹெலிகாப்டர் தரை இறங்கும் வசதிகள் மருத்துவமனைகளில் இறங்குவதற்கான வாய்ப்புகள் தொடர்பான திட்டம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.