வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தும் அரசு!

0
67

வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தும் அரசு!

இந்தியாவில் கொரோனா தொற்றானது மக்களை அச்சுறுத்தி வந்து பின்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் டெல்லியிலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 22,751 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, நேற்று சற்று குறைந்து 19 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என அம்மாநிலை சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்.

கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் உச்சம் ஏற்கனவே டெல்லியில் வந்துவிட்டதாகவும், அப்படி இல்லை எனில் அது இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் உறுதியாக நிகழும் என தெரிவித்துள்ளார். அதன்பின் தினசரி கொரோனா பாதிப்பு குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பரிசோதனை செய்வதில் நான்கு பேரில் ஒருவருக்கு கொரேனா பாசிட்டிவ் என்ற நிலை உள்ளதாக தெரிவித்த அவர் நேற்று ஒரு நாளில் மட்டும் பாதிப்பு விகிதம் 25 சதவீதமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே 5-ந் தேதிக்கு பிறகு மிகவும் அதிகமான பாசிட்டிவாக இது உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் வண்ணம்  அனைத்து தனியார் நிறுவனங்களும், ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K