ஆணாதிக்கத்தை களைய “கூகுளின்” புதிய முயற்சி! அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா?

0
71

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஆண் பெண் அனைவரும் சமம். எந்த இடத்திலும் பெண் இருக்கிறாள். ஆண்கள் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் செய்கிறார். ஆனால், பொதுவாக நாம் ஒருவரை அழைக்கும் பொழுது அல்லது ஒரு கலைஞர் , ஒரு தொழிலதிபரோ, ஒரு பதவியில் இருப்பவர்களையோ நாம் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள் அனைத்துமே ஒரு ஆணை மையப்படுத்திதான் வருகின்றது. இதை மாற்ற கூகுள் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.

எதற்காக இப்படி கூகுள் இந்த மாற்றத்தை கொண்டு வருகிறது என்றால் சமூகத்தில் ஆண் பெண் என பாகுபாடு இருக்கக்கூடாது அனைவரும் சமம் என்று சொல்வதற்காகவே இந்த ஒரு மாறுதலை கொண்டு வந்துள்ளது.

ஆண் ஆதிக்கம் மேலோங்கி விடக்கூடாது பெண்களுக்கு ஆண்களுக்கு சமமான உரிமையை கொடுக்க வேண்டும் என்று, சொற்களில் அடையாளமற்ற சொற்களை புகட்டுவதால் சமூகத்தில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூகுள் கருதுகிறது.

எடுத்துக்காட்டாக கூகுள் டாகுமெண்ட்டில் என்று நீங்கள் policeman என்று டைப் செய்தால் police officer என்று காட்டும், chairman என்று டைப் செய்தால் chair person என்று காண்பிக்கும். அதை பயன்படுத்த சொல்லி அறிவுறுத்தும்.

Mankind – Humankind, Man hours – Human hours, Mailman – Mail person இந்த மாதிரியான பல சொற்கள் ஆணாதிக்கத்தை குறிப்பதாகவும், இதை மாற்றுவதால் சமூகத்தில் ஆணாதிக்கத்தை களைந்து அனைவரையும் சம நோக்கோடு பார்க்கும் தன்மை வெளிப்படும் என்றும் கூகுள் நம்புகிறது.

அனைவரும் இதனைப் பயன்படுத்த தொடங்கும்பொழுது சொற்களில் கூட ஆணாதிக்கம் தலைதூக்காது என்று கூறுகிறது.

author avatar
Kowsalya