ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
80

ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!!

அட்லஸ் விபிஎன் 2022 ஜனவரி 1 முதல் அதிகம் பாதிப்புக்கு உள்ளான இணையதளங்களைப்
பற்றிய கணக்கெடுப்பு ஆய்வுகளை நடத்தியது.இந்த கணக்கெடுப்பு ஆய்வுகளின் அறிக்கையை கடந்த வாரம் அட்லஸ் விபிஎன் வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையின் படி நம் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய கூகுள் குரோம் ஜனவரி 1 முதல் அக்டோபர் 5 வரை 3159 பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும், குறிப்பாக அக்டோபர் மாதத்தில் முதல் ஐந்து நாட்களில் அதிக அளவு பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.

அதன்படி இணையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட மிகவும் ஆபத்தான பிரவுசரில் கூகுள் குரோம் முதல் இடத்திலும் ஃபயர் பாக்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளது என அட்லஸ் விபிஎன் தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது.

author avatar
Pavithra