தமிழ் சினிமாவிற்கு  பாய் சொன்ன ஜோ! இனி இந்த மொழியில்  தான் நடிக்கவுள்ளாரா  வெளியான புதிய அப்டேட்?

0
126
Joe who said bye bye to Tamil cinema! Will he act in this language?
Joe who said bye bye to Tamil cinema! Will he act in this language?

தமிழ் சினிமாவிற்கு  பாய் சொன்ன ஜோ! இனி இந்த மொழியில்  தான் நடிக்கவுள்ளாரா  வெளியான புதிய அப்டேட்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யாவுக்கும்  ஜோதிகாவுக்கும்  கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இவர்  திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

அதனையடுத்து  கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் ஜோதிகா நடிக்க. தொடங்கினார். அந்த வரிசையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உடன்பிறப்பபே தான். இந்நிலையில் தற்போது ஜோதிகா மலையாள படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள  திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் மலையாள திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை  ஜெஒ பேபி  இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்தில் காத்துக்கொண்டுள்ளனர்.

author avatar
Parthipan K