மக்களே ஒரு குட் நியூஸ்! இனி முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

0
63

கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கொரோனா தடுப்பு ஊசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் சென்னை இன்னோவேஷன் ஹப் என்ற அமைப்பின் சார்பில் மாநகராட்சி இணையதளத்தில் தடுப்பூசி போட பதிவு செய்து கொள்ள புதிய இணையதளத்தை https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ உருவாக்கியுள்ளது.

மிகவும் பெரிய நகரமான சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் செய்யப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் எளிதில் பயன்படும் வகையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள நீண்ட நேரம் காத்திருக்காமல் இந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லியுள்ளது.

புதிய இணையதள வசதியின் தொடக்க விழா நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இணையதளத்தின் மூலமாக தடுப்பூசி செழித்து கொள்ள வேண்டிய பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையத்தினை தேர்வு செய்து அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவர்கள் தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்புகொண்டு தடுப்பூசி மையம் மற்றும் அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

044 46122300 தொலைபேசி எண்ணிலும் 9499933644 என்ற மொபைல் எண் வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

author avatar
Kowsalya