தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை!

0
53
பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!
Good news released by the Government of Tamil Nadu! This is the only right for them anymore!

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை!

தமிழக அரசானது மண் எடுப்பதற்கு தடை விதித்திருந்தது.ஏனென்றால் மக்கள் அதிகளவு மண் எடுப்பதால் வெள்ளம் பாதிப்பு ஏற்படும்.அதனால் மண் அல்லப்படுவது குற்றம் என கூறினர்.ஆற்று மணலுக்கு மாற்று மண் குறித்தும் ஆற்று மணலை எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் கடந்த பத்து ஆண்டுகளாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.அதேபோல உயர் நீதிமன்ற தீர்ப்பானது,தமிழக ஆறுகளில் அள்ளுவதற்கு இனி மணல் இல்லை.அரை மீட்டர் என்றிருந்த அளவைவிட அதிகமாக 10-25 மீட்டர் ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு விட்டது.அதனால் மாற்று மணலுக்கான மாற்றத்தினை  கொண்டு வர வேண்டும் என்று கூறினர்.அதுமட்டுமின்றி மாற்று மணல் சரியானதாக இல்லை என்றால் அதற்கு இணையாக வேறு ஏதேனும் உபயோகம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தது.

அதற்கு பிறகு மணல் கிடைக்காததால் மக்கள் எம் சென்ட் மணலை உபயோகம் செய்தனர்.இந்த மணலையே அதிகப்படியான மக்கள் வீடுகட்டுவதற்கு உபயோகம் செய்தனர்.இதற்கிடையே செங்கல் சூலை வைத்திருப்போர்,மண்பாண்ட தொழிலாளர்கள் தொடர்ந்து அரசிடம் நாங்கள் மணல் எடுப்பதற்கு அனுமதி தர வேண்டும் என்று கேட்டனர்.ஏனென்றால் அவர்கள் செய்யும் தொழிலுக்கு மணல் தேவைப்படுவதால் இத்தகைய கோரிக்கையை தமிழக அரசிடம் முன் வைத்தனர்.

தற்பொழுது செங்கல்சூளை மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் வைத்த கோரிக்கையை அரசு ஏற்றது.அரசு மணல் அள்ளுவதற்கு கூறிய உத்தரவிலிருந்து சிறிது திருத்தம் செய்து இந்த இரு தொழில் முனைவோர் மட்டும் மணல் எடுப்பதற்கான தடை நீக்கப்படும் என கூறியுள்ளனர்.அந்தவகையில் தற்போது 1.5 மீட்டர் வரை மண் எடுப்பதற்கான அரசாங்கம் அனுமதியை வழங்கியுள்ளது.இவர்கள் மண் எடுக்க வேண்டுமென்றால் கனிம வளத்துறை அதிகரிடம் அனுமதி கடிதம் பெற்றுக்கொண்டு மண் எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.மேற்கொண்டு அந்த மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற்றுக்கொண்டு மண் எடுக்கலாம் என கூறியுள்ளனர்.அதேபோல மண் எடுப்பதால் வெள்ளம் பாதிப்பு ஏற்படும்.அதனை கட்டுப்படுத்த மண் எடுத்தவர்கள் மரங்கள் நட வேண்டும் என கூறியுள்ளனர்.