மத்திய அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கை! குறையும் பெட்ரோல் டீசல் விலை!

0
97

சமீபகாலமாக பெட்ரோல் விலை வெகுவாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் முதற்கொண்டு சாதாரண மனிதன் வரை எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கின்றார்கள்.

சென்ற பத்து மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோலின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. ஆனாலும் மத்திய அரசு தலையிட்டு இந்த விலையேற்றத்தை குறைக்க இயலும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். நமது நாட்டின் எரிபொருளுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் வரி அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே அதனை குறைத்தால் பெட்ரோல் டீசலின் விலை தானாகவே குறைந்து விடும் என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில், வரி விதிப்பை குறைப்பதற்கான ஆலோசனையில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மக்கள் எல்லோரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

அதோடு இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் .இதையெல்லாம் கருத்தில் வைத்து தான் மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குளிர் காலத்திற்கு பின்னர் பெட்ரோலின் விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் வருகின்றது என பல விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.