மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி பள்ளிகளுக்கு விடுமுறை! அரசின் அதிரடி நடவடிக்கை!

0
56
The scorching summer sun! Holidays for schools from May 2!
The scorching summer sun! Holidays for schools from May 2!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி பள்ளிகளுக்கு விடுமுறை! அரசின் அதிரடி நடவடிக்கை!

தற்போது தான் அனைத்து மாநிலங்களிலும் தொற்று பாதிப்புக்கள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்ற பாடங்களை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பருவமழை பல இடங்களில் பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழகம் ,ஆந்திரா  உள்ளிட்ட மாநிலங்களில்  பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த வகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தற்போது அதிக அளவு குளிர் நிலவி வருகிறது.

எனவே ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் அதிக அளவு குளிர் நிலவுவதால் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை விடுமுறை அளித்துள்ளனர். அந்த வகையில் டிசம்பர் 6 முதல் பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி வரை ஜம்முவில் குளிர் கால மண்டலங்களில் உள்ள எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர் கால விடுமுறை அளித்து உள்ளனர். அதேபோல டிசம்பர் 13 முதல் பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி வரை குளிர்காலம் மண்டலத்திலுள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை அளித்துள்ளனர்.

இம் மாணவர்களுக்கு விடுமுறை தேதி வருவதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை முடிக்குமாறு  அம்மாநில அரசு குளிர்கால மண்டலத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜம்முவில் உள்ள கோடை மண்டலங்களில் நடைபெற்று வரும் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் டிசம்பர் 24 முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை குளிர் கால விடுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் உயர்நிலைப்பள்ளி தேர்வுகள் நெருங்கி வருவதால் அனைத்து ஆசிரியர்களும் பாடங்களை விரைவில் முடித்தாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையிலேயே தொற்று பாதிப்பு பரவ மழை என மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை நாட்களாகவே அமைந்து வருகிறது.