பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை!

0
90

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் அனத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த 2019-2020-ம் ஆண்டில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்து நடப்பு ஆண்டு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்பட்டு வருகிறது.

 

மேலும் அதன்படி நடப்பு ஆண்டில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 14,17,19 வயது மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளையும் பல்வேறு நிலைகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

 

மேலும் அத்துடன் மாணவ, மாணவியருக்கு தடகள போட்டிகள் மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் உத்தேச செயல் திட்ட அட்டவணையின் அடிப்படையில்

இதில் முதற்கட்டமாக 14,17,19 வயது உட்பட்டவர்களுக்கு குறுவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

 

மேலும் அத்துடன் மாணவர்களுக்கு வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் 2ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நவம்பர் 10ம் தேதி முதல் 14ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K