சபரி மலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி!!இனி இவைகளெல்லாம் கட்டாயமில்லை!!

0
144
Good news for Sabarimala devotees !! All this is no longer mandatory !!
Good news for Sabarimala devotees !! All this is no longer mandatory !!

சபரி மலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி!!இனி இவைகளெல்லாம் கட்டாயமில்லை!!

கொரோனா காலகட்டத்தில் பல கோவில்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய  ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டது. அதிலும் மிக முக்கியமாக சபரிமலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா பரவல்கள் கட்டுக்குள் இருப்பதால் வெளியிட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வுற்று நிலையில் உள்ளன. இதுகுறித்து சபரிமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிடப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தன. சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தவும் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்வதற்கு வசதியை கேரள அரசு அறிமுகப்படுத்தியது.இதனை கேரளா காவல்துறை அடிப்படையில் கீழ் கொண்டு செயல்பட்டுவந்தது.

சபரிமலையில் தேவஸ்தானத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது . மனு விசாரணை மேற்கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் பக்தர்களின் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு செயல்பாடு கொண்டு வரப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முறையில் தரிசன டிக்கெட்டுகளை வழங்கப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனாவுக்காக போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது . இதன் தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் கொரோனா  கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தபடாத நிலையில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆதார் அட்டை மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை ஒன்றில் காண்பித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் என்று தேவஸ்தானம் கூறியிருந்தது.மேலும் இனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆவணங்கள் சமர்மிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்  அனைவரும் நிம்மதியாக சுவாமியை தரிசித்து விட்டு  செல்வார்கள்.

author avatar
Parthipan K