போராட்டமா பண்றீங்க? நியாயவிலை கடை பணியாளர்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட தமிழக அரசு!

0
66

தமிழகம் முழுவதும் ஏற்கனவே ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதாவது அவர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பொருட்கள் வழங்கப்படுவதாக மாற்று ஏற்பாடுகளை செய்து மாற்று பணியாளர்களை அமர்த்தி பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்திருந்த 3 நாட்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது எதிர்வரும் 13ஆம் தேதி நியாய விலை கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஆகவே நியாயவிலை கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அவர்களுடைய சம்பளம் பிடிக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலை கடைகளில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையிட்டிருக்கிறார்.