ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு

0
99
Good news for ration card holders! Government announces extension of free scheme till next year
Good news for ration card holders! Government announces extension of free scheme till next year

ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் அன்றாட வேலைகளுக்கு செல்லாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் அன்றாட உணவுக்கு கஷ்டபடும் சூழல் உருவானது.இதற்காக ரேசன் கடைகளில் அரசு உணவு பொருட்களை வழங்கி வந்தது.இந்நிலையில் இந்த திட்டம் குறித்து டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை கடுமையாக பாதித்தது.அதில் நம் இந்தியாவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்,உதவிகளையும் செய்து வருகிறது.அந்தவகையில் தான் ஊரங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியவர்களுக்கு உதவி செய்ய அரசு ரேசன் கடைகளில் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின் காரணமாக கொரோனா காலத்திலும் மக்களுக்கு முறையான உணவு கிடைத்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பானது பெருமளவு குறைந்துள்ளதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்களும் அன்றாட வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அதே நேரத்தில் அடுத்த ப[பிரச்சனையாக தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ கடந்த நவம்பர் மாதம் 24 தேதி அன்று கண்டறியப்பட்டது. மேலும் ஏற்கனவே கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை வைரஸை விட இது மிகவும் வேகமாக பரவ கூடியதாக உள்ளது.

இதனையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த நிலையில் இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று மேலும் பரவாமல் இருக்க மீண்டும் கடுமையான ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது பெரும்பாலான மக்களுக்கு மகிழ்ச்சியை தர கூடியதாக அமைந்துள்ளது. குறிப்பாக இலவச உணவு பொருட்கள் வழங்கும் இந்த திட்டத்தில் 72.77 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர்.

இதில் புலம்பெயர்ந்த மக்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் என அனைவருக்கும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் படி இலவச உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4 கிலோ கோதுமையும், 1 கிலோ அரிசியும் இத்திட்டம் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.