மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மின் கட்டணம் கட்ட தேவையில்லை!

0
108
Good news for people! No need to pay electricity bills!
Good news for people! No need to pay electricity bills!

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மின் கட்டணம் கட்ட தேவையில்லை!

இந்த கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பெரும் பாதிப்பை தந்துள்ளது.மக்களின் பாதுக்கப்பை நோக்கி அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை அமல்படுத்தி தான் வருகின்றனர்.இருப்பினும் கொரோனா தொற்று பரவல் குறைந்த பாடு இல்லை.ஓரிரு மாவட்டங்களில் இன்றளவும் அதிகரித்து வருகிறது.அதனை கட்டுப்படுத்த கட்டுப்பாடான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.முதல் கொரோனா பரவலின் போது முன் கூட்டியே எச்சரிக்கையாக இருந்ததால் அதிகப்படியான உயிரிழப்பிலிருந்து மக்களை காப்பாற்ற முடிந்தது.

தற்போது ஆட்சி மாறிய சூலில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவானது.இந்த ஆட்சி அமைந்த நாளிலிருந்தே மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இருப்பினும் இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியதில் பாமர மக்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல்,வாங்கிய கடன் செலுத்த முடியாமலும் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர்.

முன்பு உள்ள ஆட்சியின் போது கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு போட்டபோதிலும் மின் கட்டணம் உள்பட இதர கட்டணங்கள் செலுத்துவதற்கு அரசாங்கம் கால அவகாசத்தை நீடித்தது.ஆனால் இம்முறை ஆட்சி மாறியதில் எந்த வித கால அவகாசத்தையும் தர வில்லை.அதனால் மக்கள் பெருமளவு சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஓர் முடிவை எடுத்துள்ளது.அதன்படி மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது,தற்போது கொரோனா காரணத்தினால் மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி இருக்கின்றனர்.அதனால் மின் கட்டணம் கட்ட தவறினாலும் மின் வசதி துண்டிக்கப்படாது என செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளார்.இதனால் கால அவகாசம் எடுத்து மக்கள் அனைவரும் மின் கட்டணம் தவறாம செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.