ஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ்! உயர் நீதிமன்றம் வழங்கிய  அதிரடி தீர்ப்பு!

0
106
Good news for online game lovers! Action Judgment issued by the High Court!
Good news for online game lovers! Action Judgment issued by the High Court!

ஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ்! உயர் நீதிமன்றம் வழங்கிய  அதிரடி தீர்ப்பு!

மக்கள் அனைவரும் டிஜிட்டல் உலகிற்கு நாளடைவில் முழுமையாக மாறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெருக்களில் விளையாடுவதை அனைத்தும் மறந்து விட்டு சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் விளையாடி வருகின்றனர். அந்தவகையில் பெரியவர்கள் சிலர் பணம் போட்டு விளையாடும் விளையாட்டால் பாதிப்பை சந்திக்கின்றனர். அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சு என்பது போல் அளவுக்கு மீறிய பேராசையால் பணத்தை விளையாட்டுகளில் போட்டு பெரிய இழப்பீட்டை சந்திக்கின்றனர். அவர் பணம் போட்டு விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று தான் ரம்மி.

இந்த விளையாட்டின் விளம்பரத்தில் கூட பணம் இழக்கும் அபாயம் ஏற்படலாம் எனக் கூறுகின்றனர். அதனை கண்டுகொள்ளாமல் பலர் இந்த விளையாட்டில் பலர் தங்களது பணத்தை போட்டு விளையாடி பழகி அதற்கு அடிமையாகியுள்ளனர். அதனால் அவர்களது குடும்பம் பெருமளவு பாதிப்பிற்குள்ளாக்குகிறது. அதனை தடுக்கும் விதமாக கேரள மாநிலத்தில் பிப்ரவரி மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடுவதற்கு தடை விதித்தனர். அதற்கான சட்டத்தையும் கேரள அரசு கொண்டு வந்தது. இவ்வாறு கேரளா ரம்மி விளையாட்டை தடை செய்ததால் பலர் அதனைப் பாராட்டி வந்தனர்.

அதேபோல மற்றொரு தரப்பினர் அந்த தடையை நீக்குமாறு கூறினர். அவ்வாறு ரம்மி விளையாடுவது ரத்து செய்யப்பட்ட தடையை நீக்குமாறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கானது நீதிபதி டிஆர் ரவி முன்பு அமர்வுக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் நீதிபதி கூறியதாவது, கேரள அரசு எடுத்துள்ள ஆன்லைன் விளையாட்டை ரத்து செய்யும் சட்டமானது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டது ஆகும். இந்த முடிவானது வர்த்தக உரிமையை பாதிப்படைய செய்யும். அதுமட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என இவ்வாறு தீர்ப்பு வழங்கினார்.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் இதே உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு முன்னணியாக இருக்கும் கிரிக்கெட் வீரர் தோனி, விராட் கோலி, தமன்னா மற்றும் போர் மலையாள நடிகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூறியதாவது, இந்த ஆன்லைன் ரம்மி விளையாடுவது தற்சமயம் அதிக அளவில் பிரபலமாகி வருகிறது.இது தட் சட்டபூர்வமாக தடை செய்ய வேண்டும் என்றும் இந்த தடை மற்ற மாநிலங்களும் செய்துள்ளது இவ்வாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.