நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

0
110
Good news for Fair Price Shop staff! Minister released important information about salary increase and pension!
Good news for Fair Price Shop staff! Minister released important information about salary increase and pension!

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

கரூர் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றனர். இந்த விழாவானது அம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதேபோல பேச்சு போட்டி ஓவியப்போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் கையில் பரிசு வழங்கப்பட்டது. மேலும் மகளிர் சுய உதவி குழுவுக்கு கடன் தொகைகளையும் வழங்கினர்.

பின்பு கூட்டுறவு துறை அமைச்சர் பேசியதாவது, அமைச்சராக நான் பொறுப்பேற்றவுடன், கூட்டத்தில் பங்கேற்று முதன் முதலில் கையெழுத்து போட்டது புதிய உறுப்பினர்களை நியமிக்க தான். அந்த வகையில், 3.50 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்த்து 1200 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது புதிய உறுப்பினர்களாக ஏழு லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இதனடிப்படையில் இவர்களுக்கு 2000 கோடி அளவில் கடன் வழங்கப்பட உள்ளது.

புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக விதிகள் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைவருக்குமான  ஒரே அரசு இருக்கிறது என்றால் அது திமுக மட்டும் தான். இந்தியாவிலேயே வேற எங்கும் இல்லாத திட்டம் தமிழகத்தில் தான் உள்ளது. நிலம்தமில்லாதவர்கள் கால்நடை வளர்ப்பு கடன் பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான். அதன் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர். கிட்டத்தட்ட சேலத்தில் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கரூர் மாவட்டத்தில் மட்டும் கால்நடை பராமரிப்பு திட்டத்தின் கீழ் 75 லட்சம் பேருக்கு கடன் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 59 கோடி அளவிற்கு கடன் வழங்குயுள்ளோம். கிட்டத்தட்ட 100 கோடி கடன் ஆனது கால்நடை பராமரிப்புக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால படிப்பிற்காக அவர்களும் கூட்டுறவில் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம்.

மேலும் தமிழகத்தில் பழைய வாடகை கட்டிடங்களில் இருக்கும் நியாய விலைக் கடைகளை மாற்றி புதியதாக  சொந்த கட்டிடத்தில் மாற்ற செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று கூறினார். மேலும் தொடக்க வேளாண்மை சங்கங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.