தமிழக மக்களுக்கு நற்செய்தி சொன்ன மாநில சுகாதாரத்துறை!

0
70

தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என சுகாதார துறையின் சார்பாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும், குடும்ப சுகாதார அட்டை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு அட்டை திமுகவின் முந்தைய ஆட்சி காலத்திலும் வழங்கப்பட்டது. அதேபோல அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும் அதே மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இந்த அட்டையின் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, தொழில், மருத்துவக் குறிப்புகள், உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சென்று சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சிகிச்சை வழங்கப்படும். மேலும் மாநிலம் முழுவதும் 5.98 கோடி முதியவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 4.48 கோடி பேர் கடந்த ஒரு வருடத்தில் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் 33 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தம் மற்றும் 23.1 லட்சம் பேர் சர்க்கரை நோய் காரணமாகவும், பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் எனவும், அதேபோல 16.8 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட இரண்டுமே இருக்கிறது என்றும், அவர் கூறியிருக்கிறார்.

தலைநகர் சென்னையில் இதுவரையில் 17 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களில் 1.9 லட்சம் நபர்கள் உயர் ரத்த அழுத்தத்தாலும், 1.5 லட்சம் பேர் சர்க்கரை நோயினாலும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் எல்லோருக்கும் சுகாதார பணியாளர்கள் வீடு தேடிச் சென்று மருத்துவ பெட்டகங்கள் வழங்கி வருகிறார்கள். இதுவரையில் 83 லட்சம் மருந்துகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here