அரசு பணியாளர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

0
92
Good news again for government employees !! Action order issued by the Central Government !!
Good news again for government employees !! Action order issued by the Central Government !!

அரசு பணியாளர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

மத்திய அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் அதாவது 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் வாங்கும் மத்திய அரசு பணியாளர்கள் வரும் ஜூலை மாதத்தில் 6% அகவிலைப்படி உயர்வை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் கீழே கூறப்பட்டுள்ளது.அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் காத்திருக்கும் லட்சக்கணக்கான அரசு பணியாளர்கள் ஜூலை மாதத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் உயர்வு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த உயர்வு சமீபத்தில் வெளிவந்துள்ள அகில இந்திய CPI-IW தரவு மூலம் உறுதியாகிறது. இந்நிலையில் ஏஐசிபி இன்டெக்ஸ் ஏப்ரல் மாதத்திற்கான டிஏவை நிர்ணயிப்பதில் முக்கியமான காரணியாக உள்ளது. இது மத்திய அரசின் டிஏ தொகையை மேம்படுத்துவதற்கான சான்றை குறிக்கிறது.ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு மேலும் நல்ல செய்திகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள் . ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் 6% உயர்வு இருக்கும் என்று காத்திரிக்கின்றனர்.

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்த DA தொகை 40 சதவீதத்தை எட்டக்கூடும் எனவும் அதாவது ஏப்ரல் மாதத்திற்கான அகில இந்திய CPI-IW 1.7 புள்ளிகள் அதிகரித்து 127.7 ஆக இருந்தது. இப்போது அடுத்தபடியாக அரசு பணியாளர்களுக்கு மே மாதத்திற்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் மேலும் அதிகரித்தால் டிஏ எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.அதாவது 6% இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

பொதுவாக மத்திய அரசு பணியாளர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. இப்போது ஏப்ரல் மாதத்திற்கான ஏஐசிபி இன்டெக்ஸ் தரவுப்படி டிஏ தொகை 6% வரை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.அதாவது மொத்த டிஏ 40 சதவிகிதம் வரை உயரலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.16 கோடி மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளார்கள்.

இந்த கூடுதல் தவணைத் தொகை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K