போட்டிகளில் கலந்துகொள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு: கோமதி மாரிமுத்து!

0
58

ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ள 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட கோமதி, அத்தடையை எதிர்த்து விளையாட்டுத் துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து கடந்த ஆண்டு தோகாவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று தங்கம் வென்றார். ஆனால் இந்தப் போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட சோதனையில் கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதனால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2023 மே 16 வரை நடக்கும் போட்டிகளில் அவர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், பணம் மற்றும் இதர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆனால் இதனை ஆரம்பத்திலிருந்தே முற்றிலுமாக மறுத்து வந்த கோமதி, தற்போது ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொள் தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து விளையாட்டுத்துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

author avatar
Parthipan K