சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்

0
62

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்

வியாழக்கிழமையன்று துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த அஜ்மல் தாசீன் (23) விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறிக்கப்பட்டு, அவரிடம் நடத்திய சோதனையில், 3 பொட்டலங்களில் பசை வடிவிலான தங்கமும், 49 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை ஒரு பொட்டலத்திலும் வைத்து, உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. 

மொத்தத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 712 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தப் பயணி கைது செய்யப்பட்டார். 

முன்னதாக, புதன்கிழமையன்று இரவு கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்  மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜித் (36), உபைதூர் ரஹ்மான் (37), சபீர் அலி (37) விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் மூவரும் பசை வடிவிலான தங்கத்தை மலக்குடலில் மறைத்து கடத்தி வந்திருப்பதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 555 கிராம் எடையுள்ள பசைவடிவிலான தங்கம் மற்றும் 3 தங்க மோதிரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆக மொத்தத்தில்  ரூ.57 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.35 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, மேல்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.