தங்கத்தின் விலை குறையுமா? குறையாதா? அடுத்த டார்கெட் இது தான்!

0
383
Gold and Silver Rate in Chennai-News4 Tamil Business News3
Gold and Silver Rate in Chennai-News4 Tamil Business News3

சாமானிய மக்களின் முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரலாறு காணாத தங்கத்தின் விலை உயர்வானது பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சூழ்நிலையை  பயன்படுத்தி பெரும் தொழிலதிபர்களும் பணக்கார்களும் தற்போது தங்கத்தை லாபகரமான முதலீடாக கருதினாலும் ஏழை எளிய சாமானிய  மக்களுக்கு தங்கமளது எட்டாக்கனியாகவே உள்ளது.

வெள்ளிக்கிழமையான இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையானது பத்தாவது நாளாக தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையானது 40,832 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது 5104 என்ற அளவில் விற்பனையாகிறது.

கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதல் இன்று ஜூலை 30 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 3000 க்கு மேல் உயர்ந்துள்ளது அதே ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 30520 என்ற அளவில் விற்பனையானது.

குறிப்பாக கடந்த ஜூலை 22 ஆம் தேதி 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலையானது 32 ஆயிரத்தையும் அதே 24 ஆம் தேதி தங்கத்தின் விலையானது 39 ஆயிரத்தையும் 27 ஆம் தேதி 40 ஆயிரத்தையும் தாண்டி இன்றைய நிலவரப்படி 51 ஆயிரத்தையும் தங்கத்தின் விலையானது தொட்டுள்ளது.

அதே போல 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஜூலை 22 ஆம் தேதி 52 ஆயிரத்தையும், ஜூலை 24 ஆம் தேதி 53 ஆயிரத்தையும், ஜூலை 27 ஆம் தேதி 54 ஆயிரத்தையும் தாண்டி தற்போது இன்றைய நிலவரப்படி 55 ஆயிரத்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை உயர காரணம் என்ன?

தற்போதைய சூழலில் இவ்வாறு வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலையானது உயர்ந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.  அதில் குறிப்பாக கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, அமெரிக்க டாலரின் மதிப்பு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது மேலும் இது மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைகள்,  தங்கத்தில் அதிகரித்துவரும் முதலீடு மற்றும் வட்டி விகிதங்களில் ஏற்பட்ட மாற்றம் உள்ளிட்டவை காரணமாக கருதப்படுகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்  மதிப்பீடு மாற்றம் ஏற்படும்போது தங்கத்திலும்  அதற்கேற்றவாறு மாற்றம் ஏற்படுவது இயல்பானது. அந்த வகையில் தற்போது  கொரோனா பாதிப்பினால் இந்திய பொருளாதாரம் சரிவு அடைந்துள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.கடந்த பிப்ரவரி மாத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின 71.11 ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்திய ரூபாய் மதிப்பு 74.84 ஆக உயர்ந்துள்ளது.

இது தவிர உலக சந்தையில் கடந்த மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் மதிப்பானது 1900 டாலராக ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு அதிகபட்சமாக 1981 டாலராக உள்ளது.

இதேபோல கடந்த 2011 ஆம் ஆண்டு தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவு உயரத்தை அடைந்த அந்த சமயத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சனைகள்:

உலக அளவில் பெரிய நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளான போர்,பொருளாதார தடை,உள்நாட்டு கலவரம் மற்றும் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும்.

அந்த வகையில் அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்காவானது பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையான வர்த்தக பிரச்சனைகள் தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது.குறிப்பாக கொரோனா பாதிப்பு காலமான தற்போது இந்த பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது.

அடுத்ததாக தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யும் ரஷியா,சீனாமற்றும் இந்தியா போன்ற நாடுகள் தற்போது தங்கத்தின் இறக்குமதியை குறைத்துள்ளன.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதியானது பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் இறக்குமதியானது 94 சதவீதம் குறைந்து 688 மில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் இதே காலத்தில் தங்கத்தின் இறக்குமதியானது 11.5 பில்லியன் டாலர்களாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தங்கத்தின் இறக்குமதியானது பெருமளவில் குறைந்துள்ள நிலையில் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது

வட்டி விகிதங்கள்

வங்கி உள்ளிட்ட நிதி சம்பந்தமான சேவைகளில் விதிக்கப்படும் வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலை தொடர்புடையது. அது வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கும் போது மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளதால் அவர்கள் அதை தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர் இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயரும்.

தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் பெரும்பாலான முதலீடுகளில் விதிக்கப்படும் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் அதனுடைய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

உலக நாடுகள் வைத்துள்ள தங்கத்தின் இருப்பு

உலகளவில் பெரும்பாலான நாடுகள் தங்களுடைய பொருளாதாரத்தை சமன் செய்ய  அந்த நாட்டில் உள்ள மத்திய வங்கிகளில்  தங்கத்தை இருப்பு வைப்பதை வழக்கமாக  வைத்துள்ளன.

குறிப்பாக ஒரு நாட்டில் பொருளாதாரம் சரியும் போது அந்த நாட்டில் உள்ள தங்கத்தின் இருப்பை அதிகரிப்பதன் மூலமாக பொருளாதரத்தை சமன் செய்ய அந்த நாடு முயற்சிக்கும். அந்த வகையில் பெரும்பாலான உலக நாடுகள் தங்கத்தின் இருப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் அதனுடைய விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தங்கத்தை இருப்பு வைத்திருப்பதிலும் அமெரிக்காவே முதலிடம் பிடித்துள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்காவின் கைவசம் 8133.5 டன் தங்கம் இருப்பில் உள்ளது.

அதே போல இந்தியாவானது 633.1 டன் தங்கத்தை இருப்பு வைத்திருப்பதன் மூலமாக உலக அளவில் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளது.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பு குறைவு என்ற போதிலும் இந்தியாவானது ஒரு நிலையான தங்க இருப்பு கொள்கையை பின்பற்றி வருகிறது.

அதே நேரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தங்கத்தை வாங்குவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தொடர்ந்து இரண்டாம் இடத்தை வகித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் தங்க முதலீடு

தங்கமானது பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் பொது மக்கள் பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்பவர் மேலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் தங்க நகைகளை அணிவதில் பெரிதும் ஆர்வம் காட்டுவர்.இதனால் இந்தியாவில் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து இருந்த வண்ணமேயுள்ளது.

Gold Price Updates in Chennai 2020 News4 Tamil Latest Business News in Tamil
Gold Price Updates in Chennai 2020-News4 Tamil Latest Business News in Tamil

மேலும் தற்போது உயர்ந்து வரும் தங்கத்தின் விலையானது சாமானிய மக்களையும் கையிலிருக்கும் பணத்தை கொண்டு தங்கத்தை வாங்க தூண்டுகிறது.இவ்வாறு தங்கத்தின் தேவையும் (Demand),தங்கத்தின் வரத்தும்(Supply) பெருமளவில் வித்தியாசப்படுவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே பொருளாதார வல்லுனர்கள் கணிப்பாக உள்ளது.

தங்கத்தின் விலை குறையுமா? உயருமா?

குறிப்பாக வரும் 2021 ஆம் ஆண்டு வரை தங்கத்தின் விலையானது குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது மேலும் இதே நிலைமை நீடித்து வந்தால் அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு வாரங்களில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 43 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

மேலும் உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்பட்டால் வரும் 2021 ஜனவரி வாக்கில் உலக அளவில் பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது இதனையடுத்து தங்கத்தின் விலையானது ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனாலும் தற்போது உயர்ந்த அளவிற்கு குறையுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.தங்கத்தின் விலையானது பெரிய அளவில் குறையுமா அல்லது இதே நிலையே நீடிக்குமா என்பது அடுத்தடுத்து வரும் சந்தை நிலவரங்களை பொறுத்தே நடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தங்கத்தின் விலை குறையுமா? அதிகரிக்குமா?,தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை அதிகரிக்குமா? குறையுமா?,தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?,இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்,தங்கத்தின் விலை எப்போது குறையும்? தங்கத்தின் விலை இறங்குமா? ஏறுமா?,தங்கத்தின் விலை உயர காரணம் என்ன?, தங்கத்தின் விலை ஏற காரணம் என்ன?, இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம், 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம்,1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம், 1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை என்ன?, 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன?, 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன?,1 பவுன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன?,8 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன?, 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன?, 1 கிராம் தங்கம் எவ்வளவு?, 1 சவரன் நகை எவ்வளவு?, ஒரு சவரன் தங்கத்தின் விலை என்ன?, ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன?,தங்கத்தின் விலை ஏறுமா? இறங்குமா?,தங்கத்தின் அடுத்த டார்கெட் என்ன?,

author avatar
Ammasi Manickam