38 ஆயிரத்தை நெருங்கியது தங்க விலை !இன்றைய விலை நிலவரம்

0
78

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி மனித பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரஸ் இந்தியாவிலும் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு என்ற பல காரணங்களால் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தொற்று அதிகமாக பரவத் தொடங்கிய ஏப்ரல் மாத தொடக்கத்தில் தங்க விலை
36 ஆயிரத்தை கடந்தது.அதன்பிறகு தங்க விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,008 ஆகவும்,கிராமுக்கு ரூ.4,626 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,424 ஆகவும்,கிராமுக்கு
ரூ.4678 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.54.10 ஆகவும்,கிலோவுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ.54,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Parthipan K