தங்கத்தின் விலை உயர்வும்! அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டமும்!

0
90

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் இருந்த காரணத்தால், தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கை மிக பெரிய அளவில் அதிகரித்து இருந்தது இதற்கு ஏற்றது போல மத்திய அரசின் பி எஸ் ஐ கட்டுப்பாடு மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த தங்க நகை வர்த்தகத்தையும் மாற்றும் அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. இதனால் தங்க நகை வாங்குவோரும் நகைக்கடை வைத்திருப்பவரும் வியப்பில் இருக்கிறார்கள்.

அவர்களுடைய இந்த வியப்பிற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நேற்று மாலை க்கு பின்னர் மிகப்பெரிய அளவில் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது இதனால் அடுத்த சில தினங்களுக்கு நகைக்கடையில் கூட்டம் இருப்பதே கடினம் என்று சொல்லப்படுகிறது.

தற்சமயம் சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் மூலமாக தங்கம் விலை மீண்டும் தன்னுடைய அதிகப்படியான அளவான 56 ஆயிரம் ரூபாய் அளவீட்டை அடையுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அப்படி அதிகமானால் பங்குச்சந்தை மீதான முதலிடம் பாதிப்படையும் என்று சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் காலை ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1812. ஐம்பத்து எட்டு டாலர் முதல் 1815 புள்ளி முப்பத்தி ஒரு டாலர் வரையில் வர்த்தகம் நடந்து இருக்கிறது ஆனால் மதிய வர்த்தகத்திற்கு மேலே ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத விலையில் 1835 டாலர் என்ற ஒரு மாத உயர்வை பதிவு செய்திருக்கிறது.

தங்கத்தின் விலையில், உண்டாகி இருக்கும் இந்த திடீர் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள் தான் என்று சொல்லப்படுகிறது. வாரங்களில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அமெரிக்கச் சந்தை தடுமாற்றத்தை சந்தித்தது. இருந்தாலும் தற்சமயம் மொத்த வேலைவாய்ப்பு தரவுகள் தொடர்பாக இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது நேற்று வெளியான அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் குறைந்தபட்சம் 720 வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில், வெறும் 235 வேலை வாய்ப்புகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது அமெரிக்க சந்தையை புரட்டிப் போட்டிருக்கிறது.

ஒருவரும் வேலைவாய்ப்பு இல்லாத எண்ணிக்கை அதிகரிப்பு மறுபுறம் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலாத நிலை என்று அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தை கிரிட்லாக் ஆக இருப்பதாக விமர்சனம் செய்யப்படுகின்றது. இதன்மூலமாக பெடரல் ரிசர்வ் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது