ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் மகிழ்ச்சி.!!

0
75

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ‌.80 குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரித்தது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,522க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி,ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.36,176 விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,096க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் 40 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.