தங்கத்தின் விலை சரிவு! நகை பிரியர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!

0
113
gold-price-collapse-good-news-for-jewelry-lovers
gold-price-collapse-good-news-for-jewelry-lovers

தங்கத்தின் விலை சரிவு! நகை பிரியர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் மக்கள் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என எண்ணி தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்தது.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்களும் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். அதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. மேலும் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தங்கத்தின் விலை உச்சம் பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்து வரும் நாட்களில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஒரே வாரத்தில் 3000 ரூபாய் வரை அதிகத்து. அதனால்  நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று தங்கம் விலை ரூ 160 உயர்ந்துள்ளது. மேலும் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் கிராம ஒன்றுக்கு ரூ 10 குறைந்த 5,570 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.

மேலும் ஆபரண தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 560 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால் வெள்ளியின் விலை கிலோ 100 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூம் 74.70 ஆக விற்பனையாகிறது ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Parthipan K