சற்று முன்: தொடர்ந்து சரியும் தங்கம்! கிலோவிற்கு 1000 குறைந்த வெள்ளி!

0
104

கடந்த புதன்கிழமை அன்று மத்திய வங்கி தனது மாதாந்திரக் கூட்டத்தில் எடுத்த முடிவில் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான செய்தியை வலுபடுத்தியதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது. வெள்ளி விலையை மேலும் குறைத்துள்ளது .நேற்று தங்கம் ஏறத் தொடங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது.

ன்றைய தங்கத்தின் விலை;

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து
ரூ.4430க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.35440-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 ரூபாய் குறைந்து ரூ.4789-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 240 குறைந்து ரூ.38312-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

உயர்ந்த உலோகங்கள் அனைத்தும் வீழ்ச்சியை கண்டுள்ளது. வெள்ளி கடந்த ஒரு வாரமாகவே குறைந்து வருகிறது. இது அமெரிக்க டாலரில் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. வெள்ளி ஒரு கிராம் 1.00 காசுகள் குறைந்து 73.10விற்க்கும், ஒரு கிலோ ரூ. 73100 க்கும் விற்கப்பட்டு வருகிறது. கிலோவிற்கு 1000 ரூபாய் குறைந்துள்ளது வெள்ளி.

அனைவரும் தங்கத்தின் மீது உள்ள முதலீட்டை அதிகபடுத்தி வருகின்றனர். அமெரிக்க டாலர்கள் வலு பெற்றுள்ளதால் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான ஒருசில சமிக்கைகளை வெளியிட்டதால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிந்தன. இந்த செய்திகள் அமெரிக்க டாலரை வலுக்க செய்வதால் சர்வதேச சந்தைகளில் பலவீனமான நிலையை தங்கம் மற்றும் வெள்ளி காண்பிக்கின்றன.ஆனால் சடார் என்று கீழே விழும் தங்கம் ஏற்றத்தை காணும் வாய்ப்பு அருகில் உள்ளது என்று பங்குதாரர்கள் கூறுகிறார்கள்.

author avatar
Kowsalya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here