கல்லா கட்ட பிளான் போட்ட இறையன்பு.. இந்த செயலாளர் பதவி மறுபடியும் வேண்டாம்!! அடுத்தடுத்து இவர் பதவிக்கு ரெடியான மூத்த நிர்வாகிகள்!!

0
180
God used the plan to build the stone.. I don't want this secretary post again!! Senior executives who are ready for his position in succession!!
God used the plan to build the stone.. I don't want this secretary post again!! Senior executives who are ready for his position in succession!!

கல்லா கட்ட பிளான் போட்ட இறையன்பு.. இந்த செயலாளர் பதவி மறுபடியும் வேண்டாம்!! அடுத்தடுத்து இவர் பதவிக்கு ரெடியான மூத்த நிர்வாகிகள்!!

திமுகவானது சுமார் பத்து ஆண்டுகள் கடந்து ஆட்சி அமைத்த பொழுது எந்தெந்த பதவிகளில் யாரை அமர வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதோடு உயர் அதிகாரிகளின் பதவியும் உரிய நம்பிக்கை உள்ள நபருக்கு வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி அதற்கு ஏற்றவாறு நிர்வாகிகளை நியமித்தார்.

அந்த வகையில் தமிழகத்தின் உயரிய பதவியாக கருதப்படும் தலைமை செயலாளர் பதவிக்கு இறையன்பு அவர்களை நியமித்தார். முன்னாள் முதல்வர் கலைஞரின் செயலாளராக இருந்த இறையன்புவை தமிழ்நாடு அரசின் உயரிய பதவியான தலைமைச் செயலாளர் பதவிக்கு நியமனம் செய்ததையொட்டி அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

தற்பொழுது அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அடுத்தது இந்த இடத்திற்கு யார் வர போகிறார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இறையன்பு தற்பொழுது அவருக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து வருவதால் அவரையே பணி நீட்டிப்பு செய்யலாம் எனவும் முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு இறையன்பு ஒத்துவரவில்லை எனவும் கூறுகின்றனர்.

அந்த வகையில் அவர் வேறு ஒரு பதவிக்கு  எதிர்பார்ப்பதாகவும், அதனால் இந்த தலைமை செயலாளர் பதவி வேண்டாம் என தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.ஏற்கனவே இவர் அரசு பணிகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் நிறைய புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்பொழுது அவர் தமிழ்நாடு அரசு துறைகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் டிஎன்பிஎஸ்சி யின் தலைவராக நியமிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

முந்தைய ஆட்சியிலேயே பணியாளர்களை நியமிப்பதில் லஞ்சம் என்று அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் தற்பொழுது அதனை எல்லாம் மாற்றும் விதமாக இவரை களத்தில் இறக்குவதாகவும் திமுக கூறுகிறது. ஆனால் அரசியல் சுற்று வட்டாரங்களோ, வழக்கம் போல இறையன்புவும் அவரது கல்லாவை நிரப்ப பார்க்கிறார், அதற்காக தான் இந்த பதவி எனவும் அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.

கடந்த காலங்களில் தன்னுடைய செயல்பாடுகள் மூலமாக நேர்மையான அதிகாரி என்று பெயருடன் இருந்த இவர் தற்போது முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தலைமை செயலாளர் பதவிக்கு வந்த பின்னர் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே வகித்து வரும் இவருடைய பதவிக்கு மூத்த நிர்வாகிகளாக இருக்கும் நகராட்சி நிர்வாக துறை செயலாளரான சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மற்றும் விக்ரம், கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்று இருப்பதாகவும் இவர்களில் யாரேனும் பணியமர்த்தப்படலாம் என்றும் கூறுகின்றனர்.