உலகளாவிய நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 52 கோடியை கடந்தது!

0
56

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று பரவல் முதன்முதலாக சீனாவின் வூஹான் நகரத்தில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த நோய் தொற்று பரவல் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையிலும், டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகைகளில் உருமாற்றமடைந்து நோய் தொற்று பரவல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 56,93,96,589 என அதிகரித்திருக்கிறது. நோய் தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 54,06,34,659 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

ஆனாலும் கூட ஞாயிற்றுக்கிழமை காரணமாக, உலகம் முழுவதும் 63,91,352 பேர் பலியாகி இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒரே நாளில் 75,379 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,15,29,862 என இருக்கிறது. ஒரே நாளில் நோய் தொற்று பாதிப்புக்கு 299 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

அந்த வகையில், இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் 3வது இடத்தில் இருக்கின்ற பிரேசில் நாட்டில் 58,225 பேருக்கு ஒரே நாளில் நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,98,040 என இருக்கிறது மேலும் 378 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

அதேபோல பிரேசில் நாட்டில் 1,34,188 பேருக்கும் இத்தாலி நாட்டில் 1,20,683 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.