நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
70

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 3 மாணாக்கர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் கிருபாகரன் அமர்வு இந்த வழக்கினை இன்று விசாரணை செய்தது.நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சிகள்,மற்றும் தமிழக அரசு நிதியுதவி தருவதாகவும், குடும்பத்தில் ஏதேனும் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பினை தருவதாகவும் கூறுவது தற்கொலையை ஊக்குவிப்பதற்கு சமம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததோடு,அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் வழக்கறிஞர் சூரிய பிரகாசத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

author avatar
Pavithra