மாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

0
79
Girls fear no more! Intense police surveillance before women's colleges!
Girls fear no more! Intense police surveillance before women's colleges!

மாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

கடந்த 23ஆம் தேதியன்று மருது சகோதர்களின் நினைவு தினத்தை தொடர்ந்து கடந்த  27ஆம் தேதி காளையார் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.அந்த விழாவை தொடர்ந்து பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது அந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்பதால் அங்கு எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

இந்நிலையில்  மதுரையில் தேவர் ஜெயந்தியின் போது போடப்பட்டுள்ள தடையை மீறி பலரும் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாகவும் ,அதிக சத்தத்துடன் கூடிய ஹாரன்களை ஒலித்தபடியும் ,கூச்சல் எழுப்பியும் நகரின் பல்வேறு தெருக்களில் சுற்றினர்.அப்போது அதில் ஒருசிலர் சொக்கிகுளம் பகுதி மகளிர் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தனர் அங்குள்ள மாணவியரைக் கேலி செய்து காவலாளியை தாக்கியுள்ளனர்.

மேலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இறந்தவரின் உடலை ஏற்றிச்சென்ற வாகனத்துடன் சென்ற சிலர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி அருகே மாணவியை கேலி செய்தனர்.அதனை கண்ட மாணவியின் தந்தை தட்டிகேட்ட பொழுது அவரையும் தாக்கியுள்ளனர்.

பெண்கள் கல்லூரிகள் முன்பாக இவ்வாறு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.அதனால் மாநகர காவல் ஆணையர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதன் பிறகு கல்லூரிகளுக்கு முன்பாக மாணவ ,மாணவியர் காலை மற்றும் மாலை வரும் நேரங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K