குலாம் நபி ஆசாத் கபில் சிபல் பாஜகவில் இணைகிறார்கள்? அழைப்பு விடுத்த ராம்தாஸ் அத்வாலே

0
67

காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபலை பாஜகவிற்கு வரவேற்பதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் தலைவர் பதவி தேர்ந்தெடுக்கப் படுவது தொடர்பாக, இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அண்மையில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 24 பேர் கடிதம் எழுதியிருந்தனர்.

இது காங்கிரசின் தலைவர் பதவி குறித்து ஆலோசனை நடத்திய காரிய கமிட்டி கூட்டத்திற்கு முன்னதாக சோனியா காந்திக்கு அனுப்பி இருந்தனர்.

 

கட்சியில் சில நிர்வாகிகள் சோனியா காந்தியே தலைவராக தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

 

ஆனால் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 24 பேர் காங்கிரஸின் தலைவர் பதவிக்கு கட்சித் தேர்தல் மூலம் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

 

இதனால் அக்கட்சிக்குள் கருத்து மோதல் வெடித்துள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான (Republican Party of India)

ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளதாவது, “காங்கிரசுக்காக குலாம் நபி ஆசாத்தும், கபில் சிபலும் அதிகம் உழைத்துள்ளதாகவும், அப்படியிருக்கையில் அவர்கள் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால், ஆசாத்தும், சிபலும் கட்சியில் இருந்து வெளியேறி விட வேண்டும்” என்றும் கூறினார்.

“அவர்கள் இருவரும் பாஜக கட்சியில் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம், கட்சியில் இணைய நான் ஆசாத்துக்கும், சிபலுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K