அவசரம் உடனே இதை செய்யுங்கள்! அமெரிக்கர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்!

0
71

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று அமெரிக்காவிடம் ரஷ்யா கோரிக்கை வைத்தது ஆனாலும் ரஷ்யாவின் இந்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது. இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1.5 லட்சம் படைவீரர்களை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, எந்த சமயத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாமென்று அஞ்சப்படுகிறது.

அந்த நாட்டின் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா எல்லையில் படைகளைக் குவித்திருப்பதாக அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே எச்சரிக்கை செய்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் உலக நாடுகளை ரஷ்யாவிற்கு எதிராக திரட்டும் முயற்சியில் அமெரிக்கா மிக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் வான்வழியாக குண்டு வீச்சுடன் எந்த சமயத்திலும் ரஷ்யா தன்னுடைய போரை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் உக்ரைனில் வசித்து வரும் அமெரிக்க நாட்டை சார்ந்தவர்கள் அனைவரும் 2 நாட்களில் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் எச்சரிக்கை செய்தார்.

இதன் காரணமாக, பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. இதனை அடுத்து 15கும் மேற்பட்ட மேற்கத்திய நாடுகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தங்களுடைய நாட்டு குடிமக்களை கேட்டுக்கொண்டார்கள். ஒரு சில நாடுகள் ரஷ்யாவிலிருக்கின்ற தங்களுடைய தூதரகத்தை உடனடியாக காலி செய்யத் தொடங்கினார்கள்.

இந்த சூழ்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள அமெரிக்க தூதரகம் உக்ரைன் உடனான எல்லை பதற்றத்தை சுட்டிக்காட்டி ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்கர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதாவது ஊடகத்தின் மூலமாக வந்த தகவலின் அடிப்படையில் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வணிக வளாகங்கள் தொடர்வண்டி மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் பொதுமக்கள் கூடும் மற்ற இடங்கள் மற்றும் ரஷ்யாவின் எல்லையில் பதற்றம் அதிகரித்து அந்த பகுதிகளில் தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆகவே அமெரிக்க குடிமக்கள் தனிப்பட்ட வெளியேறும் திட்டங்களை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு திட்டங்களை பகுப்பாய்வு செய்யும் அமெரிக்க அரசாங்க உதவியை நம்பாத வெளியேற்ற திட்டங்களை வைத்திருங்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.