இலங்கையில் பொதுத் தேர்தல்

0
56

கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையில் 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.  கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த  பாராளுமன்ற  தேர்தலில் ராஜபக்சே  வெற்றி பெற்றார் ஆனால் எதிர்பாரத விதமாக  பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.  அதன் காரணமாக  மார்ச்சில்   நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வாக்காளர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தும் முகாம்களில் வாக்களிப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் வாக்களிக்க வசதி செய்து தரப்பட்டு உள்ளது. வாக்குச் சாவடிக்கு வருகின்ற பொழுதும் போகிறபோதும் சுத்தம்  செய்வது கட்டாயம் என அறிவுரத்தப்பட்டுள்ளன.

author avatar
Parthipan K