மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவும் தைரியமும் அதிகரிக்கும் நாள்!!

0
115

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவும் தைரியமும் அதிகரிக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவும் தைரியமும் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக காணப்படும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட உயர்ந்து வரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் திடீர் திருப்பங்களை சந்திக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் குதூகலம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani