மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

0
179
#image_title

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் காலையில் எழுந்தவுடன் பரபரப்புடன் வேலைகளை திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை ஒரு அளவிற்கு அனுகூலமாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு கூறினாலும் கவலை கொள்ள மாட்டீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நுணுக்கத்துடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சில முக்கியமான சிற்பங்களை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் மனதில் நினைத்ததை நினைத்தபடியே நடத்தி காட்டுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் பலிதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani