மிதுனம் – இன்றைய ராசிபலன்!! வருமான வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

0
75
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! வருமான வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வருமான வாய்ப்புகள் மேம்படும் நாள். சந்திர பகவான் லாப ஸ்தானத்தில் திடமாக அமர்ந்து இருப்பதால் இரட்டிப்பாக லாபங்கள் வந்து சேரும். நிதி அற்புதமாக இருக்கும்.

 

கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாகவும் லாபகரமாகவும் செல்லும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித பிரச்சனையும் இல்லாததால் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் புதிய வருமானங்களை கண்டு மகிழ்ந்து போவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சில வருமானம் கிடைக்கும்.

 

அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக உருவெடுப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியே வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani