மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படும் நாள்!

0
71
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படும் நாள். இன்று மருத்துவ செலவுகள் கண்டிப்பாக குறையும். எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதால் மனவலிமை அதிகமாக உள்ளது.

குடும்ப உறவு அதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை காணப்படும். வருமானம் வந்து சேர்வது அருமையாக உள்ளது. தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் தெரிய வரும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அருமையாக செயல்படுவார்கள். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக மாற்று மருத்துவத்தை யோசிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீ தேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk