மிதுனம் – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்! உறவினர்கள் ஆதரவு அளிக்கும் நல்ல நாள்!

0
89
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்! உறவினர்கள் ஆதரவு அளிக்கும் நல்ல நாள்!

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். குடும்ப உறவு கணவன் மனைவி உடன் பிறப்புகள் எல்லாருமே இன்று உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடிவரும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மை கரமாகவும் செல்லும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதுப்புது யுக்திகளை கையாள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ‌

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani