உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

0
67

இதுவரையில் ஐந்து மாநில அரசுகளைக் கவிழ்த்திருக்கின்றேன் ஆறாவதாக ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்ப்பேன் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் அமித்ஷா தெரிவித்ததாக அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கின்றார்.

ராஜஸ்தான் சிரோஹியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசுகையில் தெரிவித்ததாவது நோய் தொற்று பரவும் காலத்தில் ராஜஸ்தான் அரசைக் அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தனர் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இஸ்லாம் ஆகியோருடன் சென்று நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார்கள்.

அந்த சந்திப்பானது ஒரு மணிநேரம் நடந்திருக்கின்றது அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களும் இதுவரை நான் ஐந்து மாநில அரசுகளை கவிழ்த்து இருக்கின்றேன் எனவும் விரைவில் ஆறாவது அரசை கவிழ்க்க போகின்றேன் எனவும் தெரிவித்திருக்கின்றார் ஒரு காலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா போன்றவர்கள் இப்போது ஆக்கிரமித்து இருப்பதை பார்த்து நாங்கள் வெட்கப்படுகிறோம் என்று அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

மொத்தமாக நான்கு மாநில அரசாங்கங்களை கவிழ்ப்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் ஐந்தாவது மாநிலத்திலும் அவர்கள் அரசாங்கத்தை கவிழ்ப்பார்கள் எனவும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது.மூத்த தலைவர்களான அஜய் மாக்கன் , ரன்தீப் சுர்ஜேவாலா கே.சி.வேனு கோபால் மற்றும் அவினாஸ் பாண்டே ஆகியோர் இங்கே வந்து எங்களுடைய சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டதால் எங்கள் அரசாங்கம் காப்பாற்றப்பட்டது என அவர் தெரிவித்தார்.