தினேஷ் காத்திக் இருக்கும்போது அவரை ஏன் இறக்கினீர்கள்… கவாஸ்கர் கோபம்!

0
136

தினேஷ் காத்திக் இருக்கும்போது அவரை ஏன் இறக்கினீர்கள்… கவாஸ்கர் கோபம்!

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை கேப்டன் ரோஹித் ஷர்மா சரியாக பயன்படுத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 208 ரன்கள் சேர்த்தும், அந்த இலக்கை வைத்து வெற்றிப் பெற முடியாமல் கோட்டை விட்டது. இதனால் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பேட்டிங்கிலும் சில குளறுபடிகள் நடந்தன. இந்திய அணி 5 விக்கெட்களை இழந்த போது அடுத்த பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது அக்ஸர் படேல் வந்தார். அவர் 6 ரன்களை சேர்த்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் என்ற பேட்ஸ்மேன் இருக்கும் போது ஏன் அக்ஸர் படேலை இறக்க வேண்டும் என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் “நீங்கள் தினேஷ் கார்த்திக்கை நம்பினால் அவரை விரைவாக இறங்கவும் அனுமதிக்க வேண்டும். கடைசி மூன்று ஓவர்களில்தான் விளையாட வைப்பேன் என்ற தீயரியை மற்றும் பின்பற்ற கூடாது. இங்கிலாந்து அணியைப் பாருங்கள். அவர்கள் இதுபோல எதுவும் தீயரிகளை பின்பற்றாமல் சுதந்திரமாக விளையாடுகிறார்கள்.” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். கவாஸ்கரின் இந்த கருத்து சரியானது என்று ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.