ரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்!

0
158

ரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்!

நேற்றைய போட்டியில் கோலியும் ரோஹித்தும் அவசரப்பட்டு விளையாடி அவுட் ஆனதாக கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தங்களது ஷாட் தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வர்னணையாளருமான கவாஸ்கர் விமர்சித்துள்ளார். 148 ரன்களைத் துரத்திய இந்திய அணி, கேஎல் ராகுலின் ஆரம்ப விக்கெட்டை இந்தியா இழந்தது, ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் மற்றும் விராட் ஜோடி 49 ரன்கள் சேர்த்ததன் மூலம் முதல் ஓவர் அதிர்ச்சியில் இருந்து மீண்டது.

ஆனாலும் இருவரும் குறுகிய இடைவெளியில் ஒரே பந்துவீச்சாளரின் ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்று போது விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 7.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி அடுத்த 8 பந்துகளில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் என்ற மோசமான நிலைக்கு சென்றது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர் “ ரோஹித்தும் கோஹ்லிக்கும் சிறிது நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது, அவர்கள் ரன்களை சேர்த்தனர். இதற்கு முன்பு கோஹ்லியின் ஃபார்ம் பற்றி மக்கள் பேசும் போது, ​​அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறிக்கொண்டே இருந்தேன். ஆனால் இந்த போட்டியில் அவருக்கு நிறைய அதிர்ஷ்டம் இருந்தது, டிராப் கேட்சுகள், நிறைய இன்சைட் எட்ஜ் ஷாட்கள் ஸ்டம்புகளுக்கு மிக அருகில் சென்றது, அவருக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது., அவர் தொடங்கிய வேகத்தில் 60-70 வரை பெற்றிருக்க வேண்டும். ரோஹித் அவுட் ஆனவுடன் அவர் உடனடியாக வெளியேறினார். இருவரும் மறக்க முடியாத ஷாட்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த கட்டத்தில், அந்த கட்டத்தில் சிக்ஸர்களை அடிக்க தேவையே இல்லை, “அவர்கள், 70-80 ரன்களுக்கு மேல் சேர்த்த பின்னர் பெரிய ஷாட்களுக்கு சென்றிருக்க வேண்டும். இனிமேல் அவர்கள் இந்த தவறை செய்யக்கூடாது.” எனக் கூறியுள்ளார்.