வெந்து தணிந்தது காடு பார்ட் 2 விளம்பரத்துக்காக சொன்னதா… தெலுங்கு பக்கம் ஒதுங்கும் கௌதம் மேனன்!

0
276

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 விளம்பரத்துக்காக சொன்னதா… தெலுங்கு பக்கம் ஒதுங்கும் கௌதம் மேனன்!

இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மாநாடு வெற்றியால் இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் வியாபாரமும் அதிகளவில் செய்யப்பட்டது. ஆனால் ரிலீஸூக்கு பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு படம் ரசிகர்களைக் கவரவில்லை. அதே நேரத்தில் மோசமான விமர்சனங்களும் இல்லை என்பதால் மோசமான வசூலும் இல்லை.

இந்நிலையில் படத்தின் ரிலீஸின் போது படத்தின் இரண்டாம் பாகம் உடனடியாக உருவாக்கப்படும் எனப் படக்குழுவினர் கூறிவந்தனர். இயக்குனர் கௌதம் இப்போது இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை எழுதப்பட்டு வருவதாகவும் கூறினார். ஆனால் இப்போது கௌதம் மேனன் தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனியை வைத்து இருமொழிப் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கௌதம் மேனனின் அடுத்த படமாக இந்த படம்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரித்த ஜோஸ்வா திரைப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.