காந்தி ஒரு தேச துரோகி! நானும் ஒரு தேச துரோகி! அதிரவைத்த வைகோவின் பேச்சு!

0
116

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்ந்துடுக்க பட்டார். இன்று அவர் அவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். அவை, விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் நான் வேலூர் சிறையில் இருந்தேன். அந்த வழக்கில், “விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை வெறுமனே ஆதரித்துப் பேசுவது மட்டுமே பொடா சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நான் ஒரு தேச குற்றவாளி, இதை கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும். ஆம், 2009 இல் திமுக தலைவர் கருணாநிதி தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் என் மீது வழக்கு தொடுத்தார். இதனால் இந்த வருடம் சென்னை சிறப்பு நீதி மன்றம் எனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்போதும் நான் 124ஏ சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி.

ஆங்கிலேயர் ஆட்சியின் போதுதான், பாலகங்காதர திலகரும், அரவிந்த் கோசும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் அதே பிரித்தானிய முடியரசு ஒன்றியம் இன்று தங்கள் நாட்டில் அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டது.

அரவிந்த கோஷ் 124 ஏ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்தார். தேசபந்து சித்தரஞ்சன்தாஸ், சொன்ன வார்த்தைகள் மெய்சிலிர்க்கச் செய்கின்றன. அரவிந்த கோஷ் நீதிமன்றத்தின் கூண்டில் நிற்கவில்லை. வருங்கால வரலாற்றின் புகழ் கூண்டில் நிற்கின்றார். எதிர்காலத்தில் உன்னத தீர்க்கதரிசியாகவும், மனித உரிமை காவிய நாயகனாகவும் போற்றப்படுவார் என்றார்.

1924 இல் மகாத்மா காந்தி எழுதிய யங் இந்தியாவில் 124 ஏ தேசத்துரோகக் குற்றப்பிரிவு, சட்டத்தைக் கற்பழிக்கும் பிரிவு என்று எழுதினார். அதற்காக காந்தியார் தண்டிக்கப்பட்டார். பால கங்காதர திலகர் இதே சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டு மாண்டலே சிறையில் 6 ஆண்டுகள் இருந்தார். இந்த நாள்தான் திலகர் மறைந்த நினைவு நாள்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் 124ஏ பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரே ஒரு நபர் நான்தான். அந்த வகையில் என்னுடைய பெயர் இந்தியக் குற்றவியல் சட்ட வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

மேலும் பேசிய அவர், கவியரசர் ரவீந்திரநாத் தாகூர், தனது புகழ்பெற்ற கீதாஞ்சலி கவிதையில், மனித வாழ்வின் உன்னதத்தைப் பற்றி வடித்துள்ள கவிதை…

எங்கே அச்சம் என்பது மனதில் இல்லையோ
எங்கே அறிவு செம்மாந்து நிற்கின்றதோ
எங்கே மனிதன் தலைதாழாமல் நிமிர்ந்து நிற்கின்றானோ,
எங்கே அறிவு சுதந்திரமாகக் கிடைக்கின்றதோ
எங்கே குறுகிய சுவர்களால்
இந்தப் பரந்த உலகம் சின்னஞ்சிறு சுவர்களால்
துண்டுகளாக உடையவில்லையோ,
எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து சொற்கள் வெளிவருகின்றனவோ,
அங்கு அச்சம் இருக்காது போராட்ட குணமே இருக்கும் என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K